/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விரியூரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
/
விரியூரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
ADDED : டிச 01, 2025 05:00 AM
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
விரியூர் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே வழங்கி பிரசாரம் செய்தார். ஒன்றிய செயலாளர் ராஜாராம், ராஜேந்திரன், அரசு இளந்தேவன், நகர செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். பேரவை செயலாளர் கதிரவன் வரவேற்றார். விவசாய பிரிவு துணை செயலாளர் சன்னியாசி, செயலாளர் பாண்டியன், பேரவை இணை செயலாளர் ரவி, ஒன்றிய பேரவை செயலாளர்கள் கார்த்திகேயன்,மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய பேரவை செயலாளர் திருமால் நன்றி கூறினார்.

