ADDED : ஆக 20, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3 பசு மாடுகள் இறந்தன.
சின்னகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி மீனாட்சி, 40; விவசாயி. இவர், நேற்று மாலை 5:30 மணியளவில் பசு மாடுகளை மேய்த்து விட்டு வழக்கம்போல் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்தார்.
அப்போது பலத்த மழை, காற்று வீசியதால் மின் ஒயர் அறுந்து விழுந்து 3 பசு மாடுகள் இறந்தன.
இது குறித்து திருநாவலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
