ADDED : அக் 14, 2024 09:55 AM
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே நிலத்தகராறு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சந்தோஷ், 32; விவசாயி. அதே ஊரைச் சேர்ந்தவர் பாலன் மகன் சங்கர், 49; இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சந்தோஷ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இந்நிலையில் பிரச்னைக்குரிய இடத்தில் சங்கர் தனது ஆதரவாளர்களுடன் சென்று நிலத்தை உழுதுள்ளார்.
அதைத்தடுக்க முயன்ற சந்தோஷ், அவரது பெற்றோர் பாவாடை,60; ராணி, 55; ஆகியோரை சங்கர் தரப்பினர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் சங்கர், கோபி, 34; பாலன், 65; சதீஷ், 32; விக்னேஷ், 30; ஆகிய 5 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்த சங்கர், கோபி, விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.