/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காரில் புகையிலை பொருட்கள் கடத்திய பெண் உள்ளிட்ட 3 பேர் கைது
/
காரில் புகையிலை பொருட்கள் கடத்திய பெண் உள்ளிட்ட 3 பேர் கைது
காரில் புகையிலை பொருட்கள் கடத்திய பெண் உள்ளிட்ட 3 பேர் கைது
காரில் புகையிலை பொருட்கள் கடத்திய பெண் உள்ளிட்ட 3 பேர் கைது
ADDED : நவ 06, 2025 05:06 AM

திருக்கோவிலுார்: பெங்களூருவில் இருந்து காரில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேரை மணலுார்பேட்டை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையில் மணலுார்பேட்டை வழியாக காரில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக மாவட்ட எஸ்.பி., மாதவனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் முருக்கம்பாடி, மாரியம்மன் கோவில், காப்புக்காடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சந்தேகத்திற்கு இடமான வகையில் அவ்வழியாக வந்த இண்டிகோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஹான்ஸ், கூலிப், விமல் பாக்கு என 182 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், காரில் வந்த பெங்களூருவை சேர்ந்த சலீம் பாஷா, 52; அவரது மனைவி ஹாஜிரா பேகம், 48; மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக பைக்கில் வந்த திருவண்ணாமலை அடுத்த பழையனுார் கிராமத்தைச் சேர்ந்த மண்ணு மகன் மேகநாதன், 27; ஆகியோரை பிடித்து விசாரித்தபோது, பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இது குறித்து மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

