/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 06, 2025 05:03 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் கொசப்பாடி கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலையை தார் சாலையமாக மாற்ற வேண்டும், கொசப்பாடி - கல்லிப்பட்டு வரை செல்லும் மண் சாலையை தார் சாலை அமைக்க வேண்டும், சாலையின் இருபுறமும் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும், புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சாமிக்கண்ணு, சின்னதுரை, ராமர் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் ஆனந்தன், ஏழுமலை, சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் சிவாஜி, ஒன்றிய குழு பாஸ்கர், பச்சையப்பன் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

