/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
/
சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
ADDED : நவ 06, 2025 05:03 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஏமப்பேர் காசி விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
மாலையில் விஸ்வநாதேஸ்வரருக்கு அன்னம், காய்கறிகள், பழங்கள் சாற்றி அலங்காரம் செய்தனர். சிவனுக்கு பிரியமான ருத்ர மந்திரங்களை வாசித்து ஆராதித்தனர்.
இதேபோல் சிதம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், பெருவங்கூர் சாலை சங்கரலிங்கசாமி சித்தர் பீடம், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், தென்கீரனுார்-முடியனுார் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர், தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், ஆலத்துார், சிறுவத்துார், தண்டலை, விருகாவூர் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வைபவம் நடந்தது.
சின்னசேலம் சின்னசேலம் சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நேற்று அன்னாபிேஷகத்தையொட்டி மூலவருக்கு அபிேஷகம் மற்றும் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்து, மகாதீபாரதனை நடந்தது. தொடர்ந்து 160 மூட்டை அரிசி கொண்டு சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் சின்னசேலம் சிவன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கூகையூர் பஞ்சாட்சநாதர், ராயப்பனுார் கைலாசநாதர் ஆகிய கோவில்களில் நடந்த அன்னாபிேஷக நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

