
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலுார் கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை மூலவர் வீரட்டானேஸ்வரர் உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு அன்னம், காய்கறிகளால் அலங்கரித்து, சிவனடியார்களின் கைலாய வாத்தியம் முழங்க, சிவாச்சாரியார்களின் வேத மந்திரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
இரவு 8:00 மணிக்கு அன்னம் களையப்பட்டு, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

