ADDED : நவ 06, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பணிபுரியும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுவன் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்தவர் முஜாய்ஹித் மகன் ஹர்சன்,14; இவர், கள்ளக்குறிச்சி நீலமங்கலத்தை சேர்ந்த தனது உறவினர் சாஜித் மகன் பைசல் என்பவரது வீட்டில் தங்கி, கடையில் வேலை செய்துவந்தார்.
கடந்த 2ம் தேதி மாலை டிபன் வாங்குவதற்காக சென்ற ஹர்சன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் ஹர்சனை தேடினர். எங்குதேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

