/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி பஸ் மீது லாரி மோதல் 3 மாணவர்கள் காயம்
/
பள்ளி பஸ் மீது லாரி மோதல் 3 மாணவர்கள் காயம்
ADDED : ஜூலை 29, 2025 07:20 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதியதில், 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி பஸ் நேற்று காலை உளுந்துார்பேட்டையில் இருந்து மாணவர்களுடன் சென்றது.
பஸ்சை விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் வெங்கடேசன், 30; ஓட்டி னார். 7:30 மணிக்கு, சென்னை சாலையில் பெட் ரோல் பங்க் அருகே சாலையின் குறுக்கே செல்ல பஸ்சை திருப்பினார்.
அப்போது, பின்னால் வந்த பார்சல் லாரி, பள்ளி பஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில், உளுந்துார்பேட்டை மாடல் காலனி யைச் சேர்ந்த பழனிவேல் மகன் சூர்யா, 15;  அன்னை தெரசா பகுதியை சேர்ந்த சித்தாரஸ்காரன் மகன் பரணிதரன், 16; ரமேஷ் மகன் அய்யப்பன், 15; ஆகி யோர் காயமடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து லாரியை தேடி வருகின்றனர்.

