/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது
/
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது
ADDED : நவ 27, 2025 05:07 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துாரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி தனலட்சுமி, 50; இவர் நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு வீட்டின் வெளியே அக்கம் பக்கத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் சிவா, 27; முருகன் மகன் அஜீத், 25; பழனிவேல் மகன் வைரவேல், 30; ஆகியோர் தனலட்சுமியை திட்டினர்.
தொடர்ந்து, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பிரிட்ஜ், சிலிண்டர் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக கேட்ட தனலட்சுமியை கத்தியால் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் சிவா, அஜீத், வைரவேல் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

