/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 தானியங்கி மழை மானிகள்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 தானியங்கி மழை மானிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 தானியங்கி மழை மானிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 தானியங்கி மழை மானிகள்
ADDED : பிப் 23, 2024 10:22 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 தானியங்கி மழை மானிகள் அமைக்கப்படுகிறது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையின் அளவினை கணக்கிடும் பொருட்டு புதிதாக 33 மழை மானி நிலையங்கள் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி தாலுகாவில் 6, கல்வராயன்மலை 5, சங்கராபுரம் 3, சின்னசேலம் 4, திருக்கோவிலுார் 3, உளுந்துார்பேட்டை 8, வாணாபுரம் 4 என மொத்தம் 33 தானியங்கி மழைமானி நிலையங்கள் புதிதாக அமைக்கப்படுகிறது.
முதல் கட்டமாக, சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் மழை மானி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து இடங்களிலும், மழை மானி அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.