/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
2ம் நிலை காவலர் எழுத்து தேர்வு 3,577 பேருக்கு அழைப்பு
/
2ம் நிலை காவலர் எழுத்து தேர்வு 3,577 பேருக்கு அழைப்பு
2ம் நிலை காவலர் எழுத்து தேர்வு 3,577 பேருக்கு அழைப்பு
2ம் நிலை காவலர் எழுத்து தேர்வு 3,577 பேருக்கு அழைப்பு
ADDED : நவ 08, 2025 02:14 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 9 ம் தேதி நடக்கும் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வுக்கு, 3,577 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்.பி., மாதவன் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வுக்கு கடந்த ஆக.,21 ம் தேதி இணைய வழி மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு நாளை 9ம் தேதி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,743 ஆண்கள், 834 பெண்கள் என மொத்தம் 3,577 விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு எழுதுவதற்கான அழைப்பு கடிதங்கள் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி, ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி (பெண் விண்ணப்பதாரர்கள்) ஆகிய தேர்வு மையத்தில் தேர்வு நடக்கிறது.
எழுத்து தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட சீட்டு, புகைப்பட அடையாள அட்டை மற்றும் கருமைநிற பேனா கண்டிப்பாக எடுத்துவர வேண்டும். தேர்வு மையத்தில் காலை 8 மணிக்கு இருக்க வேண்டும். மொபைல்போன், எவ்வித எலக்ட்ரானிக் பொருட்களான ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் ஹெட்செட், நெக் பேன்ட் கொண்டு வரக்கூடாது. தேர்வுக் கூட மையத்திற்கு காலை 9:30 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்ல தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

