ADDED : அக் 27, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இருந்தை பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு கஞ்சா விற்ற அருள்ராஜ் மகன் வசந்தராஜ், 18; சக்திவேல் மகன் தனசேகர், 21; சிரத்தனுார் சின்னராயர் மகன் ஜான் போஸ்கோ, 22; பிரான்சிஸ் மகன் அலெக்சாண்டர், 29; ஆகிய 4 பேரையும் கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.