/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புள்ளித்தாள் விளையாடிய 4 பேர் கைது
/
புள்ளித்தாள் விளையாடிய 4 பேர் கைது
ADDED : அக் 01, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே புள்ளித்தாள் விளையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குள்ளக்கருப்பன் கோவில் அருகே, கா.மாமனந்தலை சேர்ந்த அமாவாசை மகன் மணி, 35; ஏமப்பேரை சேர்ந்த காமதேவன் மகன் கார்த்திகேயன், 45; பாலப்பட்டு அய்யாக்கண்ணு மகன் சக்திவேல், 55; வ.உ.சி., நகரை சேர்ந்த வேலு மகன் சரவணன், 37; ஆகிய 4 பேரும் புள்ளித்தாள்கள் விளையாடியது தெரிந்தது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 52 புள்ளித்தாள்கள், ரூ.1,150 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.