/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
/
கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
ADDED : ஏப் 21, 2025 10:38 PM

ரிஷிவந்தியம், ; பகண்டைகூட்ரோடு அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 17 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை, அத்தியூர் சந்தைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த பல்சர் பைக்கை நிறுத்தியபோது, பைக்கில் வந்தவர்கள் தப்ப முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில், அரியலுாரைச் சேர்ந்த செந்தில் மகன் வேல்முருகன், 23; ராமசாமி மகன் ஆகாஷ், 19; நெடுமானுார் கோவிந்தராஜ் மகன் நவீன், 20; மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. மேலும், அவர்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது.
உடன், 4 பேரையும் கைது செய்து, 250 கிராம் கஞ்சா மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.