/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புகையிலை பொருள் விற்பனை; தம்பதி உட்பட 4 பேர் கைது
/
புகையிலை பொருள் விற்பனை; தம்பதி உட்பட 4 பேர் கைது
ADDED : அக் 08, 2025 12:09 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மனுக்கள் அளித்த வந்த பொதுமக்களிடம் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அகரகோட்டாலம் சேர்ந்த நாகராஜ், 52; என்பவர் எடுத்து சென்ற பையில், ஏராளமான ஹான்ஸ் புகையிலை பொருள் இருந்தது. போலீஸ் விசாரணையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவு அருகே உள்ள பெட்டி கடையில் வாங்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் பெட்டி கடையை சோதனை செய்து உரிமையாளர் சரவணன், 43; அவரது மனைவி கற்பகம், 36; தனலட்சுமி, 60; மற்றும் நாகராஜ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.