/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 08, 2025 12:08 AM

கள்ளக்குறிச்சி; கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் சாமிதுரை, தலைவர் ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அனைத்து பணியிடங்களுக்கும் பதவி உயர்வு வழங்கும்போது கலந்தாய்வு மூலம் மண்டல ஒதுக்கீடு செய்து தர வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் காணொலி ஆய்வுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
முதல்வர் மருந்தகங்களுக்கு கூட்டுறவு சார் பதிவாளர்களை பயன்படுத்த கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாநில துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் நிறைவுயைாற்றினார். பொருளாளர் ராமச்சந்திரன், இணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரியதர்ஷனி உட்பட பலர் பங்கேற்றனர்.