/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் 40 சமூக நீதி விடுதிகள் அரசு அலுவலர்கள் குழு மூலம் ஆய்வு
/
மாவட்டத்தில் 40 சமூக நீதி விடுதிகள் அரசு அலுவலர்கள் குழு மூலம் ஆய்வு
மாவட்டத்தில் 40 சமூக நீதி விடுதிகள் அரசு அலுவலர்கள் குழு மூலம் ஆய்வு
மாவட்டத்தில் 40 சமூக நீதி விடுதிகள் அரசு அலுவலர்கள் குழு மூலம் ஆய்வு
ADDED : அக் 31, 2025 02:38 AM
கள்ளக்குறிச்சி:  மாவட்டத்தில் உள்ள  40 சமூக நீதி விடுதிகளை அரசு அலுவலகர்கள் குழு மூலம் இரு நாட்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாணவ மாணவிகளுக்கான 40 சமூக நீதி விடுதிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 40 விடுதிகளையும் நேற்றும்  இன்றும்(31 ம் தேதி) ஆய்வு செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி விடுதிகளை ஆய்வு செய்யும் பொருட்டு 7 துணை கலெக்டர்கள் , 6 தாசில்தார்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சமூக நீதி விடுதிகளை  நேற்று ஆய்வு செய்தனர். இதில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவின் தரம், மாணவர்களின் எண்ணிக்கை, குடிநீர், மின்சார வசதி, மாணவர்கள் தங்கியுள்ள விவரம் மற்றும் வருகை, வருகைப் பதிவேடு, பொருட்களின் இருப்பு, விடுதிகளின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வின் போது ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆய்வின் விவரங்களை நல்லோசை இணையதளத்திலும் பதிவு செய்து அறிக்கை அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

