/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வன உரிமை சான்று பணியை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தல்
/
வன உரிமை சான்று பணியை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தல்
வன உரிமை சான்று பணியை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தல்
வன உரிமை சான்று பணியை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தல்
ADDED : அக் 31, 2025 02:38 AM
கள்ளக்குறிச்சி:  கல்வராயன்மலை பகுதி மக்களுக்கு வன உரிமை சான்று வழங்கும் பணிகளை தொடர்ந்து விரைவாக மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வசிக்கும் பொதுமக்களுக்கு வன உரிமைச் சான்று வழங்குதல் தொடர்பாக மாவட்ட அளவிலான குழு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வன உரிமை சான்று வேண்டி  வரப்பெற்ற மனுக்களுக்கு மாவட்ட அளவிலான குழு ஒப்புதல் வழங்கும் பணிகள், வன உரிமை பட்டா தொடர்பான நிலுவையில் உள்ள மனுக்களுக்கு விரைவில் ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து வன உரிமை பட்டா தொடர்பாக குழு ஒப்புதல் பெறப்பட்டது.
மேலும் கல்வராயன்மலையில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து வன உரிமைச் சான்று வழங்கும் பணிகளை விரைவாகவும், சிறப்பு கவனம் எடுத்து மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, ஆர்.டி.ஓ., முருகன் மற்றும் வனத்துறை, வருவாய் துறை, பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

