/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏர்வாய்பட்டியில் 4 ஆயிரம் பனை விதைகள் நடவு
/
ஏர்வாய்பட்டியில் 4 ஆயிரம் பனை விதைகள் நடவு
ADDED : ஜன 01, 2025 07:36 AM

கச்சிராயபாளையம் :   ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் வனத்துறை சார்பில் 4 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
கச்சிராயபாளையம் அடுத்த ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் சமூக காடுகள் கோட்ட அலுவலர் ராஜா உத்தரவின் பேரில்,  பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம் சார்பில் நான்காயிரம் பனை விதைகளை நேற்று நடவு செய்தனர்.
நிகழ்ச்சிக்கு வன அலுவலர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். வனவர்கள் ஆதவன், பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் பன்னீர், சமூக ஆர்வலர் சாமிதுரை உட்பட பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.

