/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நம்மை காக்கும் 48 திட்டத்தில் 5,106 பேருக்கு சிகிச்சை

ADDED : அக் 09, 2025 02:22 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் இதுவரை 5,106 பேருக்கு, ரூ. 4 கோடி மதிப்பிலான கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாலை விபத்துக்குள்ளாகி உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் அனைவருக்கும் முதல் 48 மணிநேர கட்டணமில்லா அவசர சிகிச்சை அளிக்க நம்மைக் காக்கும் 48 திட்டம் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் வகையில் விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர்காக்கும் அவசர சிகிச்சை வழங்கும், 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்' கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் விபத்தில் காயமடைந்து உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் அனைவருக்கும் தொடர்ந்து உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் விபத்தால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 5,106 நபர்கள், ரூ.4 கோடியே 1 லட்சத்து 37 ஆயிரத்து 46 மதிப்பில் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.