/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி
/
வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி
ADDED : டிச 19, 2025 05:31 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வெறிநாய்கள் கடித்ததில் விளைநிலத்தில் மேய்ச்சலில் இருந்த 7 ஆடுகள் இறந்தன.
கள்ளக்குறிச்சி அடுத்த வரதப்பனுார் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ரங்கம்மாள்,35; இவர், நேற்று காலை 9:30 மணிக்கு அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் மேய்ச்சலுக்காக 8 ஆடுகளை கட்டிவிட்டு, களை பறிக்கும் பணிக்கு சென்று விட்டார்.
மதியம் 2:45 மணிக்கு விளைச்சல் நில பகுதிக்கு வந்த 3 வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறின. ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு திடுக்கிட்ட ரங்கம்மாள் வந்து பார்த்த போது, 7 ஆடுகள் உயிரிழந்த நிலையிலும், ஒரு ஆடு காயமடைந்த நிலையிலும் இருந்தது தெரிந்தது. இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இறந்த ஆடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென ரங்கம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

