/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பனிப்பொழிவு தாக்கம் மக்கள் கடும் அவதி
/
பனிப்பொழிவு தாக்கம் மக்கள் கடும் அவதி
ADDED : டிச 19, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பகுதியில் இரவிலும், காலையிலும் பனி மூட்டம் நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்திலும், காலை 8:00 மணி வரையிலும், பனிப் பொழிவு அதிகமாக காணப்படுகிறது. அவ்வப்பொழுது லேசான சாரல் மழையும் பெய்தது.
நேற்று காலை 8:00 மணி வரை பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதன் பிறகு வானம் தெளிவாகி வெயில் வீச துவங்கியது. வாகன ஓட்டிகள், வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர். பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.

