/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் பலி: உளுந்துார்பேட்டையில் பரிதாபம்

ADDED : ஜூலை 28, 2025 02:30 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த அலங்கிரி கிராமத்தை சேர்ந்த சண்முகம், காயத்ரி தம்பதியர் மகன் கார்த்திகேயன், 7; தியாகதுருகத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டில் கழிப்பறை கிடையாது. இதனால் நேற்று மாலை சிறுவன் கார்த்திகேயன் இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகில் உள்ள விவசாய நில பகுதிக்கு சென்றார்.
இரவு 8:30 மணியை தாண்டியும் சிறுவன் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
அப்போது, விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் இறந்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கிணற்றில் இறங்கி சிறுவன் உடலை மேலே கொண்டு வந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த எலவனாசூர்கோட்டை போலீசார், சிறுவன் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.