/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்தூர்பேட்டையில் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகளுக்கு 'சீல்'
/
உளுந்தூர்பேட்டையில் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகளுக்கு 'சீல்'
உளுந்தூர்பேட்டையில் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகளுக்கு 'சீல்'
உளுந்தூர்பேட்டையில் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகளுக்கு 'சீல்'
ADDED : டிச 19, 2024 01:02 AM

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 9 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கிருஷ்ண விலாஸ் லாட்ஜ் மற்றும் உணவகம் கட்டப்பட்டு கடந்த 1963ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி திறக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் லாட்ஜ் மற்றும் உணவகம் மூடப்பட்ட நிலையில் கட்டட பகுதியில் 18 கடைகள் இயங்கி வந்தன.
இந்நிலையில் கோவில் அறங்காவலர் குழு தலைவராக செல்லையா பொறுப்பேற்ற பிறகு கோவிலை புனரமைத்து கும்பாபிஷம் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். கோவிலை புனரமைக்க வேண்டும் என்றால் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ண விலாஸ் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
மேலும், 18 கடைகளில் 9 கடைகள் அகற்றுவதற்கு எதிர்ப்புகள் இருந்ததோடு, இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் வழக்கு தொடுத்தனர். இதனால் கடைகள் அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் அறங்காவலர் குழு பெரும் முயற்சியால் கடந்த மாதம் 5ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் கடைகளை அகற்றி கும்பாபிஷேகம் நடத்துமாறு இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா மற்றும் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் செயல் அலுவலர் மதனா, ஆய்வாளர் புகழேந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராதிகாசரவணன், ஏழுமலை, நகராட்சி துணை சேர்மன் வைத்தியநாதன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு கடை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் நேற்று இறங்கினர்.
அப்போது ஒரிரு கடை உரிமையாளர்கள் பொருட்களை அகற்றாமல் இருந்தனர். அறங்காவலர் குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கடையில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்து கதவுகளை மூடி சீல் வைத்தனர். பின்னர் கட்டடத்திற்கு முன்பு பெரும் பள்ளங்களை வெட்டி உள்ளே செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தினர்.
உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.