/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.93.85 லட்சம் வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.93.85 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.93.85 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.93.85 லட்சம் வர்த்தகம்
ADDED : ஜன 30, 2024 06:04 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 93.85 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விளை பொருட்களை கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி, மக்காச்சோளம் 1,500 மூட்டைகள், உளுந்து 500, கம்பு 20 , வரகு 10, வேர்க்கடலை 8, தட்டை பயறு 6, ராகி 5, நாட்டுக்கம்பு 2, ஒரு மூட்டை திணை என 462 விவசாயிகள் 2,052 மூட்டை விளைபொருட்கள் கொண்டு வரப்பட்டன.
சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,208 ரூபாய், உளுந்து 8,890, நாட்டுக்கம்பு 5,716, வரகு 3,402, வேர்க்கடலை 8,785, தட்டைப்பயிறு 5,505, ராகி 3,641, நாட்டுக்கம்பு 5,716, திணை 7,610 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 93 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம்
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் 29 விவசாயிகள் மக்காச்சோளம் 365 மூட்டைகள், உளுந்து 4, வரகு 15, மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,141, உளுந்து 8,600, வரகு 3,350 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 9 லட்சத்து 9 ஆயிரத்து 782க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம்
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் 887 விவசாயிகள் 2458 மூட்டை விளைபொருட்களை கொண்டு வந்தனர். அதில், நெல் 2116 மூட்டைகள் உளுந்து 306, கம்பு 26, தட்டைப்பயறு, பச்சைப்பயிறு 4 மூட்டைகள் மக்காச்சோளம், எள் தலா ஒரு மூட்டை விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டன.
சராசரியாக ஒரு மூட்டை நெல் 3,121 ரூபாய், உளுந்து 9,523, கம்பு 6,107, தட்டைப்பயறு 4,889, பச்சைப்பயறு 5,889, மக்காச்சோளம் 2,059, எள் 11 ஆயிரத்து 111 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு கோடியே 8 லட்சத்து 34 ஆயிரத்து 78 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.