/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு குடும்பத்தினர் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு
/
இரு குடும்பத்தினர் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு
இரு குடும்பத்தினர் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு
இரு குடும்பத்தினர் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : பிப் 27, 2024 10:48 PM
கள்ளக்குறிச்சி, - கள்ளக்குறிச்சியில் இடப்பிரச்னையில் இரு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கவரை தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி வனிதா,38; இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா மகன் உதயகுமார்,31; இரு குடும்பத்தினர் இடையே இடம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், கடந்த 26 ம் தேதி இரவு 9 மணியளவில் இரு குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் உதயகுமார் தரப்பில் பானு, ராஜா, அன்பழகன் ஆகியோர் மீதும், மற்றொரு தரப்பில் லட்சுமணன், வனிதா, அஜித், சங்கர் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

