/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாய நிலங்களில் இரை தேடி நாரைகள் கூட்டம்
/
விவசாய நிலங்களில் இரை தேடி நாரைகள் கூட்டம்
ADDED : டிச 30, 2025 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி விவசாய நிலங்களில் இரை தேடி நாரைகள் கூட்டம் அதிகமாக வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி. சில நாட்களாக கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த மழை காரணமாக பெருவாரியான விவசாய நிலங்களில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது. வயல்கள் உழுது மண் கலைக்கப்படுவதால் புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் கூட்டம் கூட்டமாக வருவது அதிகரித்துள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார், புக்கிரவாரி, எரவார் உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்களில் உணவு தேடி நாரைகள் கூட்டம் அதிகமாக வந்து செல்கின்றன.

