/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்பெண்ணையாற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி
/
தென்பெண்ணையாற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி
தென்பெண்ணையாற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி
தென்பெண்ணையாற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி
ADDED : செப் 29, 2025 01:06 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே தென்பெண்ணை ஆற்றின் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருக்கோவிலுார் கீழையூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சங்கர், 40; நேற்று காலை 8:00 மணிக்கு சிவன் கோவில் பின்புறம் தென்பெண்ணையாற்றில் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டவர், அரகண்டநல்லுார் சிவன் கோவில் பாறை அருகே சடலமாக கண்டறியப்பட்டார்.
இறந்த சங்கருக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்பதால் குளிக்கும் போது வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது. அரகண்டநல்லுார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.