/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விளம்பார் கிராமத்தில் மூடிக்கிடக்கும் நுாலகம்
/
விளம்பார் கிராமத்தில் மூடிக்கிடக்கும் நுாலகம்
ADDED : ஜன 19, 2024 07:28 AM

கள்ளக்குறிச்சி : விளம்பார் கிராமத்தில் மூடிக்கிடக்கும் நுாலகத்தை, திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கும் வசதியாக புதிதாக நுாலக கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
சில நாட்களே செயல்பட்ட நுாலகம், தற்போது நுாலகர் பணியில் இல்லாததால் திறக்கப்படாமல் பல மாதங்களாக மூடிக் கிடக்கிறது.
இதனால், பயனடைந்த மாணவர்கள் தற்போது படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நுாலகத்திற்குள் புத்தகங்களும் பாழாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நுாலகத்தில் காலியாக உள்ள நுாலகர் பணியிடத்தை நிரப்பி, தினமும் நுாலகம் திறந்து செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

