தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கனமழையால் சாய்ந்த மரம்

கனமழையால் சாய்ந்த மரம்

கனமழையால் சாய்ந்த மரம்


ADDED : அக் 05, 2024 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சியில் பெய்த மழையால் சாலையோர மின்கம்பம் மற்றும் மரங்கள் சாய்ந்தன.

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் நேற்று மாலை 5:00 மணியளவில் கன மழை பெய்தது. இதில், சூளாங்குறிச்சியில் பலத்த காற்று வீசியதால் தியாகதுருகம் சாலையில் உள்ள சாலையோர மின்கம்பம் அடியுடன் பெயர்ந்து சாய்ந்தது.

மேலும், வேப்பமரம் பெயர்ந்து கள்ளக்குறிச்சி சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. கூட்டுறவு கடன் சங்க அலுவலத்திற்கு அருகே இருந்த தேக்குமரமும் விழுந்தது.

தகவலறிந்த தியாகதுருகம் மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us