/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சேராப்பட்டில் நாளை ஆதார் சிறப்பு முகாம்
/
சேராப்பட்டில் நாளை ஆதார் சிறப்பு முகாம்
ADDED : பிப் 08, 2025 08:42 PM
கள்ளக்குறிச்சி: சேராப்பட்டில் நாளை 10ம் தேதி ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.
விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
கல்வராயன்மலையில், வசிக்கும் மக்கள் தங்கள் ஆதார் கார்டில், திருத்தங்களை மேற்கொள்ள நாள்தோறும் சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்கின்றனர். அவர்களின் நலன் கருதி, சேராப்பட்டு, நல்ல மேய்ப்பன் மேல்நிலைப்பள்ளியில், நாளை 10ம் தேதி ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாமில், புதிதாக ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் இணைத்தல், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

