/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
/
அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
ADDED : அக் 19, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தமிழ் சங்கம் சார்பில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ரிஷிவந்தியம் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ் சங்க தலைவர் இராசகோபால் தலைமை தாங்கினார். விஜயகுமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஸ்ரீதரன் வரவேற்றார். அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு, சாதனைகள் குறித்து மாரி செல்வராஜ் பேசினார். ஆரோக்கியசாமி மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.