/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பருவகால நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம்
/
பருவகால நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம்
ADDED : அக் 19, 2025 04:09 AM

கள்ளக்குறிச்சி: சிறுவங்கூரில் காய்ச்சல் மற்றும் பருவகால நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் நடமாடும் மருத்துவ குழு சார்பில் நடந்த மருத்துவ முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் காந்திமதி தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் ரவி முன்னிலை வகித்தார். முகாமில், மழைக்கால நோய்களான சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, பூச்சிக்கடி உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை தடுக்க விழிப்புணர்வு ஏறபடுத்தப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், அஜித்குமார், செவிலியர் தேன்மொழி, சந்தியா மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். வாணியந்தல் கிராமத்திலும் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.