/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழையால் சாலையோர வியாபாரிகள் கவலை
/
மழையால் சாலையோர வியாபாரிகள் கவலை
ADDED : அக் 19, 2025 04:09 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெய்து வரும் மழையால் சாலையோர வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி சிறு, குறு வியாபாரிகள் பலர் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் சாலையோரம் தற்காலிக துணி கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர். சிலர் வாகனங்களில் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்வர்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள் சாலையோர கடைகளில், தங்களுக்கு பிடித்த துணிகளை மலிவு விலையில் வாங்குவர். பண்டிகைக்கு முந்தைய 3 நாட்களில் நடக்கும் வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தால் சிறு, குறு வியாபாரிகள் பண்டிகையினை மகிழ்ச்சியாக கொண்டாடுவர்.
ஆனால், கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
பகல் நேரங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கனமழை பெய்யும் பட்சத்தில் துணிகள் நனைய வாய்ப்புள்ளதால் சிறு, குறு வியாபாரிகள் அச்சமடைந்து சாலையோர கடை அமைக்கவில்லை.
இதனால், வருமானத்தை இழந்து சாலையோர வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.