/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
/
அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
ADDED : அக் 20, 2025 12:01 AM

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான்விக்டர், டீன் அசோக் வாழ்த்தி பேசினார். முதல்வர் ஜெயசீலன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறுகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், அவரது சாதனைகள் மற்றும் நுால்களை படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் பாக்கியலட்சுமி, விஜயா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் அருள் நன்றி கூறினார்.