/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு; அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு
/
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு; அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு; அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு; அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு
ADDED : பிப் 09, 2024 11:05 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் மறுவாழ்விற்காக பணியாற்றுவேன் என உறுதிமொழியேற்றனர்.
தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டு, துவக்கி வைத்தனர்.
சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கிருஷ்ணன், ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, தொழிலாளர் ஆய்வாளர்கள் கருணாநிதி, சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.