/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
/
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜன 31, 2024 02:05 AM

கள்ளக்குறிச்சி : தியாகிகள் தினத்தை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமையில், இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, நேற்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர் மீதும், தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் உள்ளிட்ட எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன்.
சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது கடமையாகும் என்று உறுதி மொழி ஏற்றனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) யோகஜோதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி.,சமய்சிங் மீனா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில், டி.எஸ்.பி., குகன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், காவல் அலுவலர்கள், ஆயுதப்படை போலீசார் பலர் பங்கேற்றனர்.