/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
/
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
ADDED : அக் 03, 2025 01:50 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயது மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று குடிமைப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று தகுதிவாய்ந்த 22,107 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இத்திட்டம் முன்கூட்டியே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் குடிமைப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.