/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சி: கள்ளக்குறிச்சியில் கோலாகலம்; குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
/
'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சி: கள்ளக்குறிச்சியில் கோலாகலம்; குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சி: கள்ளக்குறிச்சியில் கோலாகலம்; குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சி: கள்ளக்குறிச்சியில் கோலாகலம்; குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
ADDED : அக் 03, 2025 01:49 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் விஜயதசமியையொட்டி 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் மற்றும் ஏ.கே.டி., கல்வி நிறுவனங்கள் சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.
ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் டி.இ.ஓ. விஷ்ணுமூர்த்தி, அரசு வழக்கறிஞர் தேவசந்திரன், ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா, இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பாபு சக்ரவர்த்தி, தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் இந்துபாலா, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, உதவி இயக்குனர் அன்பழகன்,அரசு மருத்துவக்கல்லுாரி பேராசிரியை டாக்டர் உஷாநந்தினி, தாசில்தார் அனந்தசயனன், ஆடிட்டர்கள் கோகுல்ராம், மணிவேல், பல் மருத்துவர்கள் விஸ்வநாதன், லஷ்மிபிரியா, ஏ.கே.டி., கல்வி நிறுவன முதல்வர் வெங்கட்ரமணன் ஆகியோர் வித்யாரம்பம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
முன்னதாக வித்யாரம்பம் நிழ்ச்சியில் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் 117-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின் நாகராஜ் குருக்கள் சிறப்பு பூஜை செய்தார். சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகளின் கைவிரலை பிடித்து நெல்லில் 'அ'னா, 'ஆ'வன்னா எழுதி குழந்தைகளின் கல்வி பயணத்தை துவக்கி வைத்தனர்.
விஜயதசமி நன்னாளில் வாழ்வில் வெற்றி பெற்ற சிறப்பு விருந்தினர்களின் மடியில் அமர வைத்து, அரிச்சுவடி எழுதி குழந்தைகளின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்து பெற்ற நிகழ்வு பங்கேற்ற பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியாக செல்பி எடுக்க செல்பி பாயிண்ட், 10 அடி உயர பாண்டா கரடி பொம்மை குழந்தைகளுடன் உடன் சேர்ந்து விளையாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் பங்கேற்ற பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஏ.கே.டி., கல்வி நிறுவனத்தின் டபுள் டெக்கர் பஸ்சில் அழைத்து சென்று குதுாகலமடைந்தனர்.
தொடர்ந்து அரிச்சுவடி எழுதிய குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும், சிறப்பு விருந்தினர் மடியில் அமர்ந்து வித்யாரம்பம் செய்த புகைப்படத்துடன் கூடிய சான்றிதழும் வழங்கப்பட்டது.