/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பி.எம்., கிசான் திட்டத்தில் நிதி பெற அடையாள எண் பெற அறிவுரை
/
பி.எம்., கிசான் திட்டத்தில் நிதி பெற அடையாள எண் பெற அறிவுரை
பி.எம்., கிசான் திட்டத்தில் நிதி பெற அடையாள எண் பெற அறிவுரை
பி.எம்., கிசான் திட்டத்தில் நிதி பெற அடையாள எண் பெற அறிவுரை
ADDED : நவ 07, 2025 12:30 AM
திருக்கோவிலுார்: பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் அடுத்த தவணை நிதி பெறுவதற்கு தனித்துவ அடையாள எண் பதிவு செய்ய திருக்கோவிலூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருக்கோவிலுார் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு கோவிந்தராஜ் செய்திகுறிப்பு:
திருக்கோவிலுார் வட்டாரத்தில் விவசாய அடையாள எண் பெறாமல் 4,754 விவசாயிகள் உள்ளனர்.
இவர்கள் பி.எம்.,கிசான் திட்டத்தின் கீழ் 21வது தவணை பெறுவதற்கு தங்கள் பெயரில் பட்டா, சிட்டா பெற்று அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து, பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றால் மட்டுமே அரசு வழங்கும் பி.எம்., கிசான் நிதியை தொடர்ந்து பெற முடியும்.
எனவே விவசாயிகள் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணுடன் தனித்துவ அடையாள எண்ணை இணைத்து பி.எம்., கிசான் திட்ட நிதியை பெற்று பயனடைய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.