/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாண் இடுபொருள் கருத்தரங்கம்
/
வேளாண் இடுபொருள் கருத்தரங்கம்
ADDED : மார் 29, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலத்தில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் கருத்தரங்க கூட்டம் நடந்தது.
இதில் நகர உர விற்பனையாளர் சங்க தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். கோவை மங்களூர் கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ் லிமிட் நிறுவன மண்டல மேலாளர் சாந்தகுமார், கோவை விற்பனை விரிவாக்க அலுவலர் கோபால் முன்னிலை வகித்தனர். சேலம் உதவி மேலாளர் சிவா வரவேற்றார். கூட்டத்தில், உரங்களின் தன்மைகள் குறித்து, 70க்கும் மேற்பட்ட குறும்படங்கள் மூலம் விற்பனையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், உரமிடுவதால் ஏற்படும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மண் பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்ப உரமிடுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.