/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாண் திட்ட செயல்பாடு கலெக்டர் அறிவுறுத்தல்
/
வேளாண் திட்ட செயல்பாடு கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : பிப் 21, 2025 05:04 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், வேளாண், வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பட்டு வளர்ச்சி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில். துறைவாரியாக முதன்மைத் திட்டங்களின் சாதனைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கல்வராயன்மலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உற்பத்தியாகும் வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த முக்கிய பயிர்களின் மதிப்பு கூட்டிய ்பொருட்களை 'கல்வராயன்' என்ற பெயரில் சந்தைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டத்தில் வேளாண் திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து முழு இலக்கை எய்திட சம்மந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.
வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.