/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 10, 2025 10:08 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி, கச்சேரி சாலையில், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அப்பாவு தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் முருகேசன், துணை தலைவர் கபில்தேவ், துணை செயலாளர் ரீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இ.கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசாமி பேசினார். இதில், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
இதில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.