ADDED : மார் 30, 2025 11:27 PM

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலத்தில் ஜெ., பேரவை சார்பில், திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செண்பகவேல் முன்னிலை வகித்தார். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், கடந்த கால அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி வீடு, வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்யராஜ், பொதுக்குழு உறுப்பினர் மணி, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், ஜெ., பேரவை மாவட்ட நிர்வாகிகள் ராஜா, முருகதாஸ், மதியழகன், உதயகுமார், வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகி தவிடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெ., பேரவை மாவட்ட இணை செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.