/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலரிடம் வாழ்த்து
/
அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலரிடம் வாழ்த்து
அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலரிடம் வாழ்த்து
அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலரிடம் வாழ்த்து
ADDED : நவ 27, 2024 08:24 AM

திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., திருக்கோவிலுார் பகுதி நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் குமரகுருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
முகையூர் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக நியமிக்கப்பட்ட சுபாஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட முரளி ஆகியோர் தலைமையில், புதிய நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் குமரகுருவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இவர்களுடன் புதிய நிர்வாகிகளான மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர்கள் சரவணன், அழகுவேல், சேகர், ஒன்றிய பாசறை தலைவர் மற்றும் இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாண்டியராஜன், முருகவேல் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.