/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மீது எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க.,வினர் புகார்
/
கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மீது எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க.,வினர் புகார்
கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மீது எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க.,வினர் புகார்
கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மீது எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க.,வினர் புகார்
ADDED : அக் 01, 2025 09:01 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அவதுாறு தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது அ.தி.மு.க., சார்பில் எஸ்.பி.,யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு தலைமையிலான கட்சி நிர்வாகிகள், எஸ்.பி., மாதவனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை அவதுாறாக பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்ட கள்ளக்குறிச்சி சேர்ந்த அ.ம.மு.க., மாவட்ட நிர்வாகி கும்கி ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்ககோரி கடந்த 8 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராபின்சனிடம் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 8 நாட்களாக இன்ஸ்பெக்டர் ராபின்சன் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்று கேட்டபோது, இரவு 11 மணி வரை காக்க வைத்து புகார் மீது தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார். அவதுாறு தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளதாக இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனுவாசன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.