ADDED : அக் 01, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது.
நவராத்திரி விழாவையொட்டி, ராகவேந்திரர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு கொலு மண்டபத்தில் நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. 9:00 மணிக்கு அம்பிகைக்கு மகா தீபாராதனை நடந்தது. கோவில் நிர்வாகி கோபிகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.