/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டி.எஸ்.எம்., கல்லுாரியில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
/
டி.எஸ்.எம்., கல்லுாரியில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
ADDED : அக் 01, 2025 11:11 PM

கள்ளக்குறிச்சி: மேலுார் டி.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரியில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் டி.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆயுதபூஜை கொண்டாடுவதன் அவசியம் குறித்து செயலாளர் அசோக்குமார் கூறியதாவது;
ஆயுதபூஜை என்பது ஒற்றுமை, பக்தி மற்றும் கலாச்சாராத்தின் அடையாளம். அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நமது பயணத்தை ஆதரிக்கும் பொருட்களை கவுரவிப்பதன் நமக்கு மேன்மேலும் வெற்றி சேரும் என பேசினார்.
தொடர்ந்து, புத்தகம், ஆய்வக உபகரணங்கள் மற்றும் வாகனங்களுக்கு பூஜை செய்து ஊழியர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.