/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 22, 2025 04:54 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை வைப்பதில் அவதுாறு பரப்பும் தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சா லையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, முன்னாள் எம்.பி., காமராஜ் பா.ஜ., மாவட்ட தலை வர் பாலசுந்தரம், பொதுச் செயலாளர் ராஜேஷ், சிலை அமைப்பு குழு உறுப்பினர் குபேந்திரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு பேசுகையில், 'கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை வைக்க அ.தி.மு.க., எதிர்ப்பதாக தி.மு.க.,வினர் அவதுாறு பரப்பி பொய்யான குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். தி.மு.க., துாண்டுதலில் வி.சி., கட்சியினர் செயல்படுகின்றனர். அம்பேத்கர் சிலை வைப்பதை முழு மனதுடன் வரவேற்கிறோம்' என்றார்.
ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யம்பெருமாள், கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், பிற அணி செயலாளர்கள் சீனுவாசன், தங்கபாண்டியன், ராஜிவ்காந்தி, வினோத், அய்யாக்கண்ணு, ஜான்பாஷா, வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் வெற்றிவேல், நகர செயலாளர்கள் ஷியாம்சுந்தர், ராகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.

